ஊர் மணம்


மீண்டும் எப்போது...?
தெரியவில்லை.

குற்றாலச் சாரலும்
அகத்தியர் அருவியும்
கண்களிலே இருக்கிறது.

ரீங்காரமிடும் கோவில் தூண்கள்
துள்ளி ஓடும்
தாவணிப் பெண்கள்...

ஊரின் சுவையை
நீரில் வைத்து சுழித்து ஓடும்
தாமிரபரணி

இருட்டு கடையிலும்
விசாக பவனிலும்
மணம் வீசிக்கொண்டிருக்கும்.

குறுக்குதுறை ஆறும்
படித்துறை காற்றும்
பகல் கனவாகிப்போனது.

மீண்டும்
எப்போது ...?
தெரியவில்லை .

சொந்த ஊரில் பிழைக்கத் தெரியாதவனின்
ஏக்கப் பெருமூச்சு ஒவ்வொரு நகரத்திலும்-காற்றோடு கலந்துகொண்டுதானிருக்கிறது....



Read Users' Comments ( 2 )

என் பார்வையில் ...


குட்டிசுவரு நண்பர்களுக்கு , ஒரு சின்ன இடைவெளிக்கு அப்புறம் சந்திக்கறோம். வாழ்த்துக்கள் .
ஒரு வழியா நான் கடவுள் பார்த்து மிரண்டு, பயந்து பயந்து காதலர் தினத்தையும் கொண்டாடி, கிடைச்ச இடைவெளியில ஈழ மக்களுக்காக தினமும் இங்க நடக்கிற காமெடிய பார்த்து என்ன பன்றதுனே தெரியாம முழிச்சு, அரசியல பொறுத்தவரை யாரு எந்த கூட்டணியில இருக்காங்கனு இப்பவே குழம்பி, கடைசியில டிவி-ய ஆன் பண்ணா இன்னும் ஓடுது வில்லு ட்ரைலர்..செத்தான் தமிழன்.

இன்னும் நிறைய விஷயம் இருக்கு நாம ஷேர் பண்றதுக்கு .... பண்ணலாம் .

அப்டியே குட்டிசுவரு நண்பர்கள் அவங்க படைப்புகள கொஞ்சம் மெயில் அனுப்பி வைங்க. நல்லா இருந்தா நம்ம ஆசிரியர் குழு (யாருப்பா அந்த குழு ...?) கண்டிப்பா அப்டேட் பண்ணும் .

வாழ்த்துகளுடன் .,

வசந்த்.


Read Users' Comments ( 0 )

குட்டி சுவரு - வீக் என்ட் ஸ்பெஷல்


என்னத்த சொல்றது..முதல்ல இந்த வார சோகத்தை சொல்லி நாமளும் கொஞ்ச நேரம் அழுதுடுவோம்..இல்ல நம்மளயும் தமிழினதுரோகி-ன்னு சொல்லிடுவாங்க. எந்த ஒரு காரணத்துக்காகவும் தற்கொலை பண்ணிக்கிறது-ன்றது வடிகட்டின முட்டாள்தனம். அந்த முட்டாள்தனத்தை வைத்து எல்லா அரசியல் கட்சிகளும் அடிக்கிற ஸ்டண்ட் கொடுமைடா சாமி.. போதும். நிறுத்திகலாம். இல்ல நம்மளுக்கெல்லாம் உருவபொம்மை கிடையாது. அப்டியே கொளுத்திருவாய்ங்க.. நல்லதே நடக்க ஆண்டவனையும், அன்னை சோனியாவையும் வேண்டிக்குவோம்.


Read Users' Comments ( 0 )


ஷேர் மார்க்கெட் மாதிரி நம்ம தமிழ்சினிமா. எப்பவும் டௌன் தான். எப்பவாவதுதான் மேலே ஏறும். இந்த வார நம்பிக்கை வெண்ணிலா கபடி குழு - டீம். 90 சதவீதம் புதுமுகங்களை வைத்து நல்லதா ஒரு படம் கொடுத்திருக்கார் இயக்குநர் சுசீந்திரன். ரொம்பநாளைக்கு அப்புறம் சராசரி கிராமத்து முகங்கள், யதார்த்தமான காமெடி, நச் க்ளைமாக்ஸ். வில்லுபடம் பார்த்துட்டு அரண்டுகிடந்த தமிழ்மக்களுக்கு நிஜமான ஆறுதல் தந்திருக்கிறது வெண்ணிலா கபடி குழு.


Read Users' Comments ( 0 )


இந்த வார சந்தோஷம்... நம்ம பயாஸ் அண்ணனும், பூபதியண்ணாவும் அவிங்களால முடிஞ்ச அளவு நம்ப வைச்சி கழுத்தறுத்தாங்க. அக்கா சானியா வந்து அவங்க பங்குக்கு கிளப்பிவிட்டுட்டு போய்ட்டாங்க.. இவிங்கள நம்பி கெட்டது போதும். இந்த வார நிஜமான ஹீரோ- யுகி பாம்ப்ரி -ஆஸி.ஓபன் ஜீனியர் வின்னர். சோம்தேவ்-ஐ ஃபாலோ பண்ணி இவரையும் வாழ்த்துவோம். மற்றபடி அண்ணன் ,அக்காவை ஃபாலோ பண்ணிடாதீங்கடா தம்பிகளா... கண்டிப்பா நல்லா வருவீங்க..! வாழ்த்துகள்....


Read Users' Comments ( 0 )